தமிழ்நாடுராமநாதபுரம்

காவல்துறை வாகனத்தை சேதப்படுத்தியவர்கள் கைது.

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் ரோந்து பணியில் ஈடுபட்ட காவலரின் அரசு வாகனத்தை மறித்து வாகனத்தின் மீது ஏறி நடனமாடியவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

பரமக்குடியில் செப்டம்பர் 11 இமானுவேல் சேகரன் குருபூஜை நடைபெற்றது.கொரானோ ஊரட்டங்கால் 144 தடை உத்தரவு பிறப்பிக்க பட்ட நிலையில் காவல் துறையினர் பாது காப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது சாலையை மறித்து நடன மாடிகொண்டிருந்த கும்பல் சாலையில் வந்த காவல் வாகனத்தை மறித்தும் வாகனத்தின் மீது ஏறியும் நடனமாடினர். இதை தொடர்ந்து அரசு அதிகாரிகளை பணிசெய்ய விடாமல் தடுத்தல் அரசு வாகனத்தை சேத படுத்தியதாக 21 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்ய 5 தனி படைகள் அமைத்து தேடிவந்த நிலையில் 10 கைது செய்ய பட்டிருந்தனர்.இந்த நிலையில் 8 பேரை தனிப்படை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Articles

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button