இந்தியாதமிழ்நாடுராமநாதபுரம்

ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு-துப்பாக்கியால் அச்சுறுத்தி, இலங்கை கடற்படையினர் அட்டூழியம்

கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்த சம்பவம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

விசைப்படகு மீனவர்கள் போராட்டம், வானிலை மைய எச்சரிக்கை உள்ளிட்ட காரணங்களால் கடந்த 15 நாட்களாக ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இந்நிலையில், நேற்று 700க்கும் மேற்பட்ட படகுகளில் கடலுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்.

கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த போது, அங்கு துப்பாக்கிகளுடன் வந்த இலங்கை கடற்படையினர், ராமேஸ்வரம் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் அச்சுறுத்தி விரட்டியடித்தனர். இச்சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button