இந்தியாதமிழ்நாடு

உள் இடஒதுக்கீடு வழங்குவதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும்-தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்….

அரசுப் பள்ளிகளில் பயின்ற ஏழை, ஏளிய மாணவர்கள் மருத்துவக் கல்வி பயில 7.5 சதவீதம் உள் இடஒதுக்கீடு வழங்கும் சட்ட த்திற்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மருத்துக் கல்லூரியில் படிப்பதற்காக, அரசுப் பள்ளியில் பயின்று நீட் தேர்வில் தேர்வான மாணவர்களுக்கு, 7.5 சதவீதம் உள் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

எனவே, தமிழக அரசின் இந்த நியாயமான கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, மாணவர்களின் எதிர்கால நலன் கருதி ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button