இந்தியாதிண்டுக்கல்

கொடைக்கானலில் சமூக இடைவெளி இல்லாமல் பயணிகளை ஏற்றி சென்ற அரசு பேருந்து

அபராதம் விதித்த சுகாதார துறை

கொடைக்கானலில் சமூக இடைவெளி இல்லாமல் 70க்கும் மேற்பட்ட  பயணிகளை ஏற்றி சென்ற அரசு பேருந்துக்கு சுகாதார துறையினர் அபராதம் விதித்தனர்

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவாமல் இருக்க பேருந்துகளில் சமூக இடைவெளியுடன் 35 பயணிகளை மட்டும் ஏற்றி செல்ல வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் கொடைக்கானலில் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருப்பதால் கொரோனா தொற்றை தடுக்கும் விதமாக சுகாதார துறையினர் முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளி இல்லாமல் வரும் பயணிகளுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்,

கொடைக்கானலில் இன்று ஞாயிறு வார சந்தையால் கொடைக்கானல் பள்ளங்கி அரசு  உள்ளூர் பேருந்தில் 70க்கும் மேற்பட்ட பயணிகளை பேருந்து ஏற்றி சென்றதால் நாயுடுபுரம் பகுதியில் சுகாதார துறையினர் தடுத்து நிறுத்தினர்

மேலும் பேருந்தில் இருந்து  35க்கும் மேற்பட்ட பயணிகளை பேருந்தில் இருந்து  இறக்கி விட்டனர்,சுகாதார துறையினர் அரசு விதிமுறைகளை நடத்துனருக்கு  எடுத்துரைத்து 2000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதாக தலைமை மருத்துவர் அரவிந்த் கிருஷ்ணன் தெரிவித்தார்

மேலும் அதிகமான பயணிகளை ஏற்றி சென்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார துறையினர் ஓட்டுனர் மற்றும் நடத்துனருக்கு  எச்சரிக்கை விடுத்தனர் அதன் பின் 35 பயணிக கொண்டு அரசு பேருந்து இயக்கப்பட்டது

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button