கோவைதமிழ்நாடு

பேருந்து நிலைய குப்பைத்தொட்டியில் கிடந்த பெண் குழந்தை…

சிங்காநல்லூர் பேருந்து நிலையம் பின்பு குப்பைத்தொட்டி அருகே பிறந்து ஐந்தே நாட்கள் ஆன பெண் குழந்தையை பயணிகள் மீட்டனர். கோவை சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்ட் பின்புறம் வாகனத்தில் போலீசார் கொரானா குறித்த பிரச்சாரம் மேற்கொண்டிருந்தனர்.

அப்போது பேருந்து நிலையம் பின்புறம் உள்ள குப்பை தொட்டி அருகே குழந்தையின் அழுகுரல் கேட்டு  ஓடிச்சென்று பார்த்தபோது பிறந்து 5 நாட்கள் ஆன பெண் குழந்தை கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்,

உடனே அவர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர் .தொடர்ந்து அருகிலிருந்த  பெண்கள் குழந்தையை எடுத்து முதலுதவி செய்துவிட்டு 108 வாகனத்தில் அனுப்பி வைத்தனர்.

மேலும் இச்சம்பவத்தை பார்த்த அந்த பகுதி பொதுமக்கள் சிங்கநல்லூர் போலீசாரை பாராட்டினார்கள், மேலும் அந்த குழந்தையை யார் இங்கு போட்டது என்பது போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button