தமிழ்நாடுதூத்துக்குடி

குலசேகரபட்டினத்தில் உலக புகழ் பெற்ற தசரா திருவிழா-கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவக்கம்

திருச்செந்தூர் குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா முதல் முறையாக பக்தர்களின்றி கொடியேற்றத்துடன் துவங்கியது.தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் உலக புகழ்பெற்ற முத்தாரம்மன் கோவில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் நவராத்திரி தினத்தில் தசரா திருவிழா நடைபெறுவது வழக்கம்.

பத்து நாட்கள் தொடர்ந்து நடைபெறக்கூடிய இந்த திருவிழாவில் பக்தர்கள் பல்வேறு வேடமணிந்து பொதுமக்களிடம் காணிக்கை பெற்று சுவாமிக்கு செலுத்துவது வழக்கமாகும். இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது.

கொரோனா ஊரடங்கு விதிமுறைகளின் காரணத்தால் முதல் முறையாக பக்தர்களின்றி கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் இந்த ஆண்டு பக்தர்கள் காப்பு கட்டவும், வேடம் அணிந்து ஊர்வலம் வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த விழாவின் முக்கிய நிகழ்வான மஹிசா சூரசம்ஹாரம் நிகழ்ச்சி வரும் 26-ம் தேதி நடைபெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திருவிழா நிகழ்ச்சிகளை யூ டியூப் மூலம் ஒளிபரப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button