இந்தியாகன்னியாகுமரிதமிழ்நாடு

நாம் தமிழர் கட்சிக்கு இணையாக புதிய கட்சி துவங்கபடும்….

கட்சியில் இருந்து விலகிய கல்யாணசுந்தரம் கன்னியாகுமரியில் பரபரப்பு பேட்டி ....

நாம் தமிழர் கட்சி கொள்கைக்கு இணையான கட்சி நவம்பர் மாதத்தில் துவங்கப்படும் என நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய பேராசிரியர் கல்யாணசுந்தரம் கன்னியாகுமரியில் பேட்டியளித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் பேராசியர் கல்யாணசுந்தரம் அண்மையில் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி இருந்தார்.

அவர் கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரைகுளத்தில் உள்ள மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளின் பள்ளியில் சிசிடிவி இயக்கத்தை துவக்கி வைக்க வந்திருந்தார். அந்த நிகழ்ச்சிக்கு பின் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது: நாம் தமிழர் கட்சி தொடங்கப்பட்ட காலத்தில் வகுக்கப்பட்ட கோட்பாடு மற்றும் கொள்கைகளை மீறி கட்சித் தலைமை செயல்படுகிறது. கட்சியிலிருந்து நிர்வாகிகளும் தொண்டர்களும் எந்தக் கருத்துக்களையும் கேட்காமல் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு வருகின்றனர்.

அதிர்ச்சியோடு கட்சியில் இருந்து வெளியேறியவர்கள் வெளியேற்றப்பட்டவர்கள் எந்த கட்சிக்கும் செல்லாமல் தொடர்ந்து தமிழ் தேசியவாதிகளாக இருக்கிறார்கள். அப்படிப்பட்ட இளைஞர்களின் ஆற்றல் வீணடிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக அவர்களை இணைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளேன்.

கட்சியின் தொண்டர்களும் நிர்வாகிகளும் கட்சித் தலைமையை தொடர்பு கொள்ள முடியாமல் உள்ளனர். நானும் பலமுறை தொடர்பு கொள்ள முயற்சித்தும் தொடர்பு கொள்ள முடியவில்லை.

இதனால் நான் மாவட்ட வாரியாக சென்று பொறுப்பாளர்களையும் கட்சியின் தொண்டர்களையும் சந்தித்து வருகிறேன். நவம்பர் மாதத்தில் புதிய கட்சி அல்லது புதிய அமைப்பை துவங்க கட்சித் தொண்டர்களுடன் பேசி முடிவெடுப்போம்.

எந்த தத்துவத்திற்கு கொள்கைக்காக நாம்தமிழர் கட்டப்பட்டதோ அதற்கு நேர் எதிராக தற்போது அந்த கட்சி பயணிக்கிற போக்கு என்பது மிகவும் வேதனையான போக்கு. நாங்கள் நாம் தமிழரின் கொள்கை அதாவது தமிழ்தேசிய கொள்கைக்கு இணையாக பயணிப்போம் எங்களுக்கு பிரச்சினையே சீமானின் நிர்வாகம் தான் சீமான் நாம் தமிழர் கட்சி கொள்கைக்கு எதிராக சென்று கொண்டிருக்கிறார் அதனால் சீமான் ஓடு முரண்பட தான் வேண்டும் முரண்பட்டு தான் ஆக வேண்டும்.

எங்களுக்கு சீமான் தலைவர் அல்ல… நாங்கள் தலைவராக பிரபாகரனை தான் ஏற்றுக் கொண்டுள்ளோம். சீமான் நேர்காணலில் சீடர்கள் எல்லாம் லீடர்களாக ஆகிவிட்டார்கள் என்று கூறியுள்ளார். நாங்கள் லீடர்களாக அல்ல…சீடர்கள் எல்லாம் கேடர்களாக மாறி இருக்கிறோம் களத்தில் பயணிக்கின்ற பணி செய்கின்றவர்களாக
மாறி இருக்கிறோம். எங்களுக்கு ஒரே லீடர் பிரபாகரன் தான் என அவர் கூறினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button