தமிழ்நாடுதிருப்பூர்

தண்ணீர் திருடும் கும்பலைக் கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

உடுமலை திருமூர்த்தி அணையில் இருந்து வெளிவரும் பாசன நீரை சட்டத்திற்குப் புறம்பாக முறைகேடாக தண்ணீர் திருடும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகை யிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை திருமூர்த்தி அணை மூலம் சுமார் 4 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன பெற்று வரும் வருகிறது மேலும் தளி கால்வாய் மூலம் எட்டு குளங்களும் , உடுமலை கால்வாய் மூலம் ஒரு குளத்திற்கும் நீர் வழங்கப்பட்டு .இதனால் சுமார் 3076 ஏக்கர் மற்றும் 36 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெற்று வருகிறது

இந்த நிலையில் 9 குளங்களில் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் சுமார் இரண்டு அல்லது மூன்று கிலோ மீட்டர் தூரம் வரை மறைமுகமாக சுமார் 10 ஆயிரம் ஏக்கருக்கு மேல் சாதாரண விவசாயிகள் பயன் அடைந்து வருகிறார்கள்

இந்நிலையில் தளி வாய்கால் பகுதியில் சட்டத்துக்குப் புறம்பாக முறைகேடாக தண்ணீரை மர்ம கும்பல் சுமார் 20 கிலோமீட்டர் வரை நேரடியாக குழாய் பதித்து தண்ணீரை திருடி வருவதாகவும் கூறப்படுகிறது

இதற்கிடையில் 4 லட்சம் ஏக்கர் பாசனத்தால் பயன்பெறும் விவசாயிகள் 18 மாதங்களுக்கு ஒரு முறை மட்டும் பாசனம் பெறுகின்றார்கள்.ஆனால் தளி கால்வாயில் நீர் வரும்போதெல்லாம் 45% சட்டத்திற்கு புறம்பாக தண்ணீர் முறைகேடாக திருடப்படுகிறது இதனால் கடை மடைக்கு தண்ணீர் செல்வது இல்லை என விவசாயிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் முறையாக விவசாயிகள் கோரிக்கை மனு கொடுத்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் ஆவேசமடைந்த விவசாயிகள் தளி வாய்க்கால் பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக தண்ணீர் திருடும் கும்பல் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு நுற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button