கன்னியாகுமரிதமிழ்நாடு

இரு சிறுமிகளை கர்ப்பமாக்கிய இரு சிறுவர்கள் கைது

கன்னியாகுமரி மாவட்டத்தில் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு இரு சிறுமிகளை கர்ப்பமாக்கிய இரண்டு சிறுவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இரணியலில் கூலித் தொழிலாளி பெண் ஒருவரின் மகள் 12-ம் வகுப்பு படித்து வரும் நிலையில், அதேபகுதியை சேர்ந்த பக்கத்து வீட்டு சிறுவனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே சிறுமியின் உடல் நிலையில் மாற்றத்தை பார்த்த தாய் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது, சிறுமி கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர் கூறியுள்ளனர்.

பின்னர் இதுகுறித்து சிறுமியின் தாய் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் பக்கத்து வீட்டு சிறுவனை கைது செய்த போலீசார் அவனை நாகர்கோவில் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதேபோன்று இரணியல் பகுதியில் கடந்த 3 மாதத்திற்கு முன்பு தனது மகளுக்கு
பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் குளச்சல் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், கோவில் திருவிழா ஒன்றின் போது, யானை பாகனுக்கு உதவியாக வந்த சிறுவன் ஒருவன் 10-ம் வகுப்பு படிக்கும் சிறுமியிடம் காதலிப்பதாக பழகி, அவரை பாலியல் துன்புறுத்தல் செய்தது தெரியவந்தது. பின்னர் அந்த சிறுவனையில் கைது செய்து நாகர்கோவில் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button