தமிழ்நாடுதிருச்சி

கோவிலுகுள் புகுந்து பூசாரியை தாக்கிய திமுக கவுன்சிலரின் கணவர்

திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்துள்ள கண்ணனூரில் அங்காளபரமேஸ்வரி கோயில் உள்ளது. இந்தக் கோயில் அறநிலைதுறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோவிலுக்கு காசிராஜன் என்பவர் அறங்காவலர் குழுத் தலைவராக உள்ளார்.

இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக இரு தரப்பு பூசாரிகளுக்கு இடையே கோவிலில் பூஜை செய்வதற்கு ஏற்பட்ட பிரச்சினையால் அறங்காவலர் குழுத்தலைவர் காசிராஜனின் மகனும், கண்ணனூர் திமுக கவுன்சிலர் திருமதி.பேபி என்பவரின் கணவருமான லெனின் கோவிலை மூடி பூட்டு போட்டு சென்றுவிட்டார். .

இந்த நிலையில் இரண்டு மாதங்களுக்கு பிறகு மீண்டும் இன்று கோயிலை திறந்து ஓம்பிரகாஸ் பூஜை செய்தார். கோவிலுக்கு பக்தர்களும் பூஜைக்கு வந்திருந்தனர்.
கருவறைக்குள் பூஜை செய்து கொண்டிருந்த பூசாரி ஓம்பிரகாஷை, திமுக கவுன்சிலரின் கணவர் லெனின் உள்ளே புகுந்து சரமாரியாக தாக்குதல் நடத்திய சம்பவம் அங்கிருந்த பக்தர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.

பின்னர் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட பிரச்சனையால் இருவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இதுகுறித்து ஜம்புநாதபுரம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.தற்போது அங்காளபரமேஸ்வரி கோயிலில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்

கோயில் பிரச்சனையில் திமுகவினர் கோயில் உள்ளே சென்று, கருவறையில் பூஜை செய்து கொண்டிருந்த பூசாரி தாக்கிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button