தமிழ்நாடுவிழுப்புரம்

நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவி தற்கொலை முயற்சி

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் நீட் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்ததால் மாணவி ரம்யா என்பவர் தற்கொலை முயற்சி செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செஞ்சியை சேர்ந்த துணிக்கடை தொழில் செய்துவரும் பன்னீர்செல்வம் என்பவரின் மகள் ரம்யா, சென்னை மேடவாக்கம் பகுதியில் உள்ள நீட் அகாடமியில் 2 லட்சம் ரூபாய் செலவு செய்து நீட் பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளார்.

ஆனால் நேற்று வெளியான நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் மனமுடைந்த அவர், கொசு மருந்தை அருந்தி தற்கொலை முயற்சி செய்தார்.

இதனால் பதறிப்போன அவரது பெற்றோர் உடனடியாக ரம்யாவை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button