தமிழ்நாடுதிருச்சி

மாஸ்க் அணியாமல் சுற்றி திரிந்த டிக் டாக் ரமேஷ்க்கு அபராதம்….

டிக் டாக் பிரபலம் திருச்சி ரமேஷ் மாஸ்க் அணியாமல் திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் வலம் வந்ததால் மாநகராட்சி அலுவலர்கள் 200 ரூபாய் அபராதம் விதித்தனர்.

அத்துடன் இது போன்று வேறு யாரும் தவறு செய்துவிடக்கூடாது என்பதற்காக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வீடியோவாக பதிவு செய்து தனது தவறை ஒப்புக் கொள்ளுமாறும் இது போன்று மாஸ்ட் அணியாமல் யாரும் வெளியே சுற்றித் திரிந்தாள் நமது உயிருக்கு ஆபத்து என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில் வீடியோ ஒன்றை பதிவிட செய்துள்ளனர்.

தமிழகத்தின் மத்திய பகுதியான திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வரும் நிலையில், மாஸ்க் அணியாமல் வருபவர்களை மாநகராட்சி நிர்வாகம் கண்காணித்து வருகிறது.

இந்நிலையில் டிக் டாக் தற்போது தடை செய்யப்பட்ட நிலையில்,டிக் டாக்கில் பிரபலமான திருச்சி ரமேஷ் மாஸ்க் அணியாமல் பேருந்து நிலையத்தில்வந்தது எடுத்து மாநகராட்சி நிர்வாகம் அபராதம் விதித்துள்ளது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button