கடலூர்தமிழ்நாடு

சிதம்பரத்தில் போலி மருத்துவம் பார்த்த ஊராட்சி மன்ற தலைவர் கைது

 

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ளகே ஆடூர் கிராமத்தைச் சேர்ந்தவர்  தணிகைவேல் இவர் அந்த கிராமத்தின் ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வருகிறார்.

இந்நிலையில் இவர் சிதம்பரம் வடக்கு வீதியில் உள்ள ஒரு தனியார் இடத்தில் அக்குபஞ்சர் வைத்தியம் செய்யும் மருத்துவமனை வைத்து வைத்தியம் பார்த்து வருகிறார் இவர் அங்கு வரும் நோயாளிகளுக்கு மருத்துவ படிப்பு படிக்காமல் மருத்துவம் பார்த்ததாக தொடர் புகார் வந்துள்ளது.

அதன் அடிப்படையில் சிதம்பரம் காவல் நிலைய ஆய்வாளர் முருகேசன் தலைமையிலான போலீசார் சென்று அவரிடம் விசாரணை நடத்தினர் இதில் அவர் எம்பிபிஎஸ் என்ற மருத்துவ படிப்பு படிக்காமல் வைத்தியம் பார்த்தது உறுதியானது

இதனை அடுத்து  போலீசார்  போலி மருத்துவர் தணிகைவேலை கைது செய்தனர் மேலும் அவரிடம் இருந்த சிரஞ்சு, மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகளையும் கைப்பற்றினர். சிதம்பரத்தில் ஊராட்சி மன்ற தலைவரே மருத்துவப் படிப்பு பார்க்காமல் நோயாளிகளுக்கு வைத்தியம் பார்த்ததாக கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button