சென்னைதமிழ்நாடு

பண்டிகை கால விடுமுறை- மேலும் 7 சிறப்பு ரயில்கள் இயக்கம்

ஆயுத பூஜை, விஜயதசமி, தீபாவளி போன்ற பண்டிகை கால விடுமுறை நாட்களையொட்டி 7 சிறப்பு ரயில்களை இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி யஸ்வந்த்பூர் – கண்ணூர் வழி செல்லும் சிறப்பு ரயிலும், செகந்திராபாத் – திருவனந்தபுரம் வழி செல்லும் சிறப்பு ரயிலும் இருவழி பயணமாக தினசரி இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று கயா – சென்னை எழும்பூர் வழி செல்லும் ரயிலும், புவனேஸ்வர் – புதுச்சேரி வழி செல்லும் ரயிலும், பரௌனி – எர்ணாகுளம் வழி செல்லும் ரயிலும் மாண்டியா – ராமேஸ்வரம் வழி செல்லும் ரயிலும், கோரக்பூர் – திருவனந்தபுரம் வழி செல்லும் ரயில்கள் வாரம் ஒரு முறை இரு வழிப்பாதையாக இயக்கப்படும் நிலையில் இந்த 7 சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை காலை 8 மணி முதல் தொடங்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button