கன்னியாகுமரிதமிழ்நாடு

பகவதி அம்மன் கோயிலில் பிரம்மாண்ட கொலு ஏற்பாடு

நவராத்திரி விழாவையொட்டி கன்னியாகுமரியில் உள்ள பகவதி அம்மன் கோயிலில் பிரம்மாண்ட கொலு அமைக்கப்பட்டுள்ளது.

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகளும் பக்தர்களும் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர்.

இந்நிலையில், நவராத்திரி விழாவையொட்டி, பகவதி அம்மன் கோயிலில் பிரம்மாண்டமான கொலு அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் சங்கம் சார்பில் அமைக்கப்பட்டிருந்த பிரமாண்டமான கொலுவிற்கு அம்மன் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது.

படிகள் அமைத்து, கொலு பொம்மைகளை அடுக்கி காண்போரை கவரும் வகையில் பிரம்மாண்டமாக வடிவமைத்துள்ளனர். 9 நாட்கள் நடைபெறும் நிவராத்திரி திருவிழாவில், நாள்தோறும், சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனையும், இரவில், வாகன பவனியும் நடைபெற்று வருகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button