இந்தியாசென்னைதமிழ்நாடு

அரசு ஊழியர்களுக்கு ஊக்க ஊதியம் ரத்து

ஆசிரியர்கள் உள்பட அரசு ஊழியர்களுக்கு ஊக்க ஊதியம் கிடையாது என தமிழக தலைமைச் செயலர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உயர்கல்வி ஊக்க ஊதியத்தை ரத்து செய்து தமிழக அரசு கடந்த மார்ச் மாதம் அரசாணை வெளியிட்டது. இந்த அரசாணை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி விரிவுரையாளர்கள், பேராசிரியர்களுக்குப் பொருந்துமா என்ற குழப்பம் இருந்து வந்தது.

இந்நிலையில், தலைமைச் செயலர் சண்முகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஊக்க ஊதியம் தொடர்பான அரசாணை ஆசிரியர்கள், பேராசிரியர்கள், இன்ஜினியர்கள், மருத்துவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் பொருந்தும் என்று தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button