சேலம்தமிழ்நாடு

சொத்துக்காக மனைவி, மகனை அடித்து துன்புறுத்தியவர் கைது..

சேலத்தில் சொத்துக்காக திருநங்கை மனைவி மற்றும் தத்தெடுத்த 13 வயது வளர்ப்பு மகனை தந்தை அடித்து துன்புறுத்தும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் ஸ்டேட் பேங்க் காலனி பகுதியை சேர்ந்த கண்ணகி என்ற திருநங்கையும் அப்சல் முபாரக் என்பவரும் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் சேர்ந்து 13 வயதுடைய சிறுவனை தத்தெடுத்து வளர்த்துள்ளனர்.

இந்த நிலையில் மனைவிக்கு சொந்தமான 30 லட்சம் மதிப்புடைய வீட்டை தனது பெயருக்கு மாற்றித்தரக்கோரி வளர்ப்பு மகனையும், திருநங்கை மனைவியையும் முபாரக் அடித்து துன்புறுத்தியுள்ளார்.

இந்த வீடியோ காட்சி வெளியானதை அடுத்து கணவர் அப்சல் முபாரக் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button