சென்னைதமிழ்நாடு

துபாயிலிருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரபட்ட 2.16 கோடி மதிப்புடைய தங்கம் பறிமுதல்..

துபாயிலிருந்து சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்த வந்தே பாரத் தனியாா் பயணிகள் மீட்பு விமானத்தில் 132 இந்தியா்கள் சென்னை அழைத்து வரப்பட்டனா்.அவா்கள் அனைவரையும் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனா்.

அப்போது சென்னை,ராமநாதபுரம்,நாகைபட்டிணம்,புதுக்கோட்டை,ஆந்திரா மாநிலத்தை சோ்ந்த 14 பயணிகள்  மீது சுங்கத்துறை அதிகாரிகள் சந்தேகம் கொண்டனர்

இதையடுத்து அவா்களை தனித்தனி அறைகளுக்கு அழைத்து சென்று முழுமையாக சோதணை செய்தனர் அவா்களின் உள்ளாடைகள் மற்றும் உடல்களுக்குள் தங்கத்தை மறைத்து வைத்திருந்ததை கண்டுப்பிடித்தனா்.

14 பேரிடமிருந்தும் ரூ.2.16 கோடி மதிப்புடைய 4.1 கிலோ தங்கத்தை கைப்பற்றினா்.அதோடு 14 பயணிகளில் மூன்றுபேரை கைது செய்த அதிகாரிகள் மீதமுள்ள பயணிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button