ஈரோடுதமிழ்நாடு

எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வர் – அமைச்சர் செங்கோட்டையன்

அதிமுகவின் பொன்விழா ஆண்டில் எடப்பாடி பழனிசாமி முதவராக இருப்பார் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் துவங்கப்பட்டதன் 49 வது ஆண்டு விழாவை முன்னிட்டு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தை சேர்ந்த அரசு பள்ளி மாணவர் 664 மதிப்பெண்கள் பெற்று நீட் தேர்வில் முதலிடம் பெற்றுள்ளதாக பொருமைபட கூறிய அவர், நீட் தேர்வில் புதிய பாடதிட்டங்களில் இருந்து அதிகப்படியான கேள்விகள் கேட்கப்பட்டிருப்பதை நாடே வியந்து பாராட்டி வருவதாகவும் கூறினார்.

மேலும் அதிமுகவின் பொன்விழா ஆண்டில் எடப்பாடி பழனிசாமி முதவராக இருப்பார் என கூறினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button