தமிழ்நாடுதிண்டுக்கல்

செய்தியாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அருவி பட நடிகை அதிதி பாலன்-முகக்கவசம் அணியாமல் வந்ததால் அபராதம் விதிப்பு

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் செய்தியாளரிடம் அருவி திரைப்பட நடிகை அதிதி பாலன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட போது, அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டன. தற்போது தளர்வுகள் அமல்படுத்தப்பட்டு சுற்றுலா தலங்கள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

வார விடுமுறையை முன்னிட்டு கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. முகக்கவசம் இல்லாமல் வருபவர்களிடம் சுகாதாரத்துறை சார்பில் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

அப்போது அங்கு முகக்கவசம் இன்றி வந்த நடிகை அதிதி பாலனிடம் அபராதம் விதிக்க கேட்டுள்ளனர். இதற்கு அவர் மறுப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

மேலும் அங்கு செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த செய்தியாளரிடமும் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இச்சம்பவம் காரணமாக அங்கு சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button