தமிழ்நாடுராமநாதபுரம்

பக்தர்கள் கொடுக்கும் கைப்பிடி அரிசியில் பல ஆண்டுகளாக அன்னதானம்…..

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஸ்ரீ ராமானுஜர் பஜனை மடத்தில் 100 ஆண்டுகளுக்கு மேலாக கைப்பிடி அரிசி திட்டத்தில் அன்னதானம் நடைபெற்று வருகிறது

புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் பஜனை மடத்தில் இருந்து வீதிகளில் பஜனை பாடி சென்று அனைவரிடமும் இருந்து  அரிசி பருப்பு இவைகளை சேகரித்து வைப்பார்கள்.

தொடர்ந்து ஐப்பசி  முதல் சனிக்கிழமையான இன்று அந்த அரிசியில் உணவு சமைத்து அன்னத்தை குவியல் இட்டு அலங்காரம் செய்து மகேஸ்வர பூஜை  நடத்தினர்.

தொடர்ந்து அனைவரும் திருப்பாவை பாசுரம் பாடி பின்னர் அனைவருக்கும் அந்த அன்னத்தை பரிமாறுகின்றனர் .அன்று ஒரு காலத்தில் அனைவரும் தங்களது வீட்டில் இருக்கும் அரிசி எடுத்துவந்து உணவு சமைத்து அனைவருக்கும் பரிமாறப்பட்டது

அந்த பழமை மாறாமல் தற்போதும் அதே போல் அன்னதானத்தை நடத்தி வருகின்றனர்  இந்நிகழ்ச்சியில் சுற்றி உள்ள பொதுமக்கள் ஏராளமானோர் மகேஸ்வர பூஜையில் கலந்துகொண்டனர். .

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button