தமிழ்நாடுதூத்துக்குடி

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு-காவலர் தாமஸ் பிரான்சிஸுக்கு 3 நாள் இடைக்கால ஜாமீன்

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் சிறையில் உள்ள காவலர் தாமஸ் பிரான்சிஸுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு காவலர்களால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.

இந்த விவகாரம் தொடர்பாக காவலர் பால்ராஜ் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் காவலர் பால்ராஜ் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.

இந்நிலையில் கைதானவர்களில் ஒருவரான காவலர் தாமஸ் பிரான்சிஸ்-க்கு 3 நாட்கள் இடைக்கால ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இடைக்கால ஜாமீனில் வெளியே செல்லும் தாமஸுக்கு காவல்துறை உரிய பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button