தமிழ்நாடுதிருவண்ணாமலை

ஆடு, மாடு கொட்டகை திட்டத்தின் கீழ் 60 கோடி ரூபாய் மோசடி

ஒப்பந்ததாரர் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

பிரதமரின் கிசான் திட்ட மோசடியை தொடர்ந்து திருவண்ணாமலையில் பிரதமர் ஆடுமாடு கொட்டகை திட்டத்தின் கீழ் 60 கோடி ரூபாய் மோசடி நடைபெற்றுள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலையில் மக்கள் பெருமளவில் விவசாயம் சார்ந்த கால்நடை வளர்ப்பு ஆடு,மாடு உள்ளிட்டவைகளை பராமரிக்கும் தொழில் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கால்நடைவளர்ப்பு தொழிலில் ஈடுபட்டுள்ள ஏழை எளிய விவசாயிகள் பயன்பெறும் வகையில் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு ஆடுமாடு கொட்டகை திட்டத்தின் கீழ், கொட்டகைகள் அமைத்து தரப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் இத்திட்டத்தின் கீழ் தரமற்ற கொட்டகைகள் அமைத்து கொடுத்து ஒப்பந்ததார்கள் பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும் அரசு அதிகாரிகள் மற்றும் தனியார் ஒப்பந்ததாரர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button