ஈரோடுதமிழ்நாடு

யூடியுப் பார்த்து கள்ளநோட்டுகள் தயாரித்த 2 பேர் கைது.,,

20 ஆயிரம் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் பறிமுதல்....

ஈரோட்டில் யூடியுப் பார்த்து கள்ளநோட்டுகள் தயாரித்த 2 பேரை போலீசார் கைது செய்து செய்துள்ளனர்.

ஈரோடு முனிசிபல் காலனியை சேர்ந்த பால்ராஜ் என்பவரிடம் அவரது நண்பர் சௌந்தர் 500 ரூபாயை கொடுத்து சில பொருட்களை வாங்கிவரச்சொல்லியுள்ளார். ஆனால் 500 ரூபாய் நோட்டை வாங்கி சுற்றி சுற்றி பார்த்து, அது உண்மையான 500 ரூபாய் நோட்டு தானா என சந்தேகித்துள்ளார் நண்பர் பால்ராஜ்…

பின்னர் அது போலியான ரூபாய் நோட்டு என்பதை அறிந்து நண்பர் செய்தாலும் தவறு தவறு தான் என்பதை உணர்த்த, இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளித்தார்.

பின்னர் அங்கு வந்த போலீசார் செளந்தரிடம் மேற்கொண்ட விசாரணையில் பால்ராஜின் நண்பரான சௌந்தர் யூடியூப் பார்த்து கள்ளநோட்டுகளை அச்சடித்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.

பின்னர் சௌந்தர் உள்ளிட்ட இருவரை கைது செய்து அவர்களிடமிருந்த 20 ஆயிரம் மதிப்புள்ள 100, 200 மற்றும் 500 ரூபாய் கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும் கள்ளநோட்டு அச்சடிக்க பயன்படுத்தப்பட்ட பிரிண்டர், கலர் பேப்பர், கார், பைக் உள்ளிட்டவற்றையும் பறிமுதல் செய்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button