சென்னைதமிழ்நாடு

இந்தியன் சாட் என்ற செயற்கைக்கோளை கண்டுபிடித்துள்ள கரூர் மாணவர்கள்

ஊக்கத்தொகையாக ரூபாய் 2லட்சம் வழங்கிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

இந்தியன் சாட் செயற்கைக்கோளை கண்டுபிடித்துள்ள கரூரை சேர்ந்த மாணவர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்தும் நன்கொடையும் வழங்கினார்.

கரூர் அரசு கல்லூரி மாணவர்கள் அட்னான், அருண், கேசவன் ஆகிய 3 பேரும் இணைந்து கையடக்க செயற்கைக்கோள் ஒன்றை வடிவமைத்துள்ளனர். இந்த செயற்கைக்கோளுக்கு இந்தியன் சாட் என்று பெயரிடப்பட்டுள்ளது.

ராக்கெட்டில் ஏற்படும் காஸ்மிக் கதிர்களின் தன்மை உள்ளிட்ட 13 வகையான தகவல்களை கண்டறியும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.அடுத்த ஆண்டு ஜூன் மாதம் நாசாவின் ராக்கெட் மூலம் இந்த செயற்கைக்கோள் விண்ணில் செலுப்பட உள்ளது.

மேலும் 3 சென்டி மீட்டர் உயிரமும் 64 கிராம் எடையும் கொண்ட இந்த செயற்கைக்கோள், விண்ணில் ஏவப்படும் பட்சத்தில் இதுவே உலகில் சிறிய மற்றும் எடை குறைந்த செயற்கைக்கோளாக கருதப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அந்த மாணவர்கள் 3 பேரும் அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜியுடன் சென்னை அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்தனர். அப்போது அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த ஸ்டாலின், ஊக்கத்தொகையாக 2 லட்சம் ரூபாய் பணத்தையும் வழங்கினார். இதனையடுத்து செந்தில் பாலாஜியும் அந்த மாணவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கினார்.

Related Articles

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button