சினிமாசென்னைதமிழ்நாடு

முத்தையா முரளிதரன் வாழ்வை தழுவி எடுக்கப்படும் திரைப்படம்

கதாநாயகனாக நடிக்கும் விஜய் சேதுபதிக்கு பாரதிராஜா எதிர்ப்பு......

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தைய முரளிதரன் வாழ்க்கையை தழுவி எடுக்கப்படும் திரைப்படத்தில் நடிக்க வேண்டாம் என நடிகர் விஜய்சேதுபதியை, இயக்குனர் பாரதிராஜா கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக, விஜய் சேதுபதிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், மக்களிடம் நல்ல பெயர் எடுப்பது ரொம்பக் கடினம் என்றும், ஆனால் பொதுமக்கள் வெகு வேகமாகவே தங்கள் மீது அன்பைக் கொட்டியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தாங்கள் செய்யவிருக்கும் 800 என்ற படம், இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனைப் பற்றிய பயோபிக் படமாக உருவாகப் போவதாக அறிந்தேன் எனவும் தெரிவித்துள்ளார்.

நம் ஈழத்தமிழ்ப் பிள்ளைகள் செத்து விழுந்த போது பிடில் வாசித்தவர் இந்த முத்தையா என்று சுட்டிக்காட்டியுள்ள பாரதிராஜா, சிங்கள இனவாதத்தை முழுக்க முழுக்க ஆதரித்தவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

எங்களைப் பொருத்தவரை முத்தையா முரளீதரனும் ஒரு நம்பிக்கைத் துரோகிதான் எனவும் கூறியுள்ளார். இனத்துரோகம் செய்த ஒருவரின் முகம் காலகாலமாக உங்கள் முகமாக வெறுப்போடே எம் மக்கள் பார்க்க வேண்டுமா? எனவும் கேள்வி
எழுப்பியுள்ளார்.

எந்த வகையிலாவது தமிழின வெறுப்பாளனின் வாழ்வியல் படத்தில் நடிப்பதை தவிர்க்க முடியுமா எனப் பாருங்கள் எனவும் பாரதிராஜா வலியுறுத்தியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button