அரசியல்தமிழ்நாடு

வன்னியர் சமூக மக்களுக்கான 15 சதவீத உள் இட ஒதுக்கீட்டை பாமக தடுக்கிறது – வன்னியர் கூட்டமைப்பு நிறுவனத் தலைவர் சி.என்.ராமமூர்த்தி குற்றச்சாட்டு

வன்னியர் சமூகத்தினருக்கு 15 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கக்கோரி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வன்னியர் கூட்டமைப்பினர் அதன் நிறுவன தலைவர் ராமமூர்த்தி தலைமையில், 50 க்கும் மேற்பட்டோர் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள விருந்தினர் மாளிகை அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய வன்னியர் கூட்டமைப்பு நிறுவனத் தலைவர் ராமமூர்த்தி, “வன்னியர்களுக்கு உடனடியாக 15 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்க வில்லை எனில் இந்த மாத இறுதிக்குள் மிகப்பெரிய போராட்டத்தை வன்னியர் கூட்டமைப்பு நடத்தும். இட ஒதுக்கீட்டிற்கும் பாமகவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பாமக விற்கு இட ஒதுக்கீடு குறித்த அடியும் நுனியும் தெரியாது. மக்களை ஏமாற்றி தப்பாக வழி நடத்துகின்றனர்.

வன்னியர் சங்கத்தில் உள்ள 103 அறக்கட்டளைகள் உள்ளன. வன்னியர் சங்க அறக்கட்டளையில் ரூ.10 லட்சம் கோடி சொத்துக்கள் உள்ளன. அதில் இருந்து வரும் வருமானம் யாருக்கு செல்கிறது? ராமதாஸ் கூட்டணியில் வந்ததிலிருந்து இந்த அரசு வன்னியர்களின் மீது சுணக்கம் காட்டுகிறது இதற்கு கூடிய விரைவில் விடிவுகாலம் வரும். பாமக அரசியல் செய்வதற்காக வன்னியர்களுக்கு வழங்கக்கூடிய 15 சதவீத உள் இடஒதுக்கீட்டை தடுக்கிறது. தன் கட்சி வளர்ச்சிக்காக வன்னியர் சமூகத்தின் வளர்ச்சியை பாமக தடுக்கிறது” என பாமக வை குற்றம் சாட்டினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button