செய்திகள்விளையாட்டு

சென்னை அணிக்கு அடி மேல் அடி… தொடரும் தோல்வியால் ரசிகர்கள் சோகம்

ஐபிஎல் சீசனில் சென்னை அணி தனது முதல் சுற்றை (7 ஆட்டங்கள்) விளையாடி முடித்துள்ளது.

ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்கெதிரான போட்டியில் சென்னை அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. சென்னை அணியின் தொடர் தோல்விகளால் அந்த அணி ரசிகர்கள் சோகத்தில் எல்லைக்கே சென்றுள்ளனர்.

துபாய் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில் பெங்களூர் அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. கேப்டன் விராட் கோலி (90 ரன்கள்) அதிரடியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அந்த அணி 4 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்தது. சென்னை அணி தரப்பில் ஷர்துல் தாகூர் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியின் வீரர்கள் அம்பத்தி ராயுடு 42 ரன்களும், ஜெகதீசன் 33 ரன்களும் எடுக்க மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் 20 ஓவர்களில் சென்னையால் 8 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

இதனால் பெங்களூர் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணி தரப்பில் கிறிஸ் மோரிஸ் அதிகப்பட்சமாக  3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன்மூலம் பெங்களூர் அணி 4 வெற்றியைப் பதிவு செய்தது. அதேசமயம் சென்னை அணிக்கு இது 5வது தோல்வியாகும்.

சென்னை அணியின் தொடரும் தோல்விகளால் ரசிகர்கள் விரக்தியடைந்துள்ளனர். ஒவ்வொரு சீசனிலும் மற்ற அணிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் அணி இம்முறை தொடர்ந்து சொதப்பி வருவது கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button