அரசியல்கவர் ஸ்டோரிதமிழ்நாடு

இந்தியாவின் சிறந்த முதலீட்டு இடங்களில் ஒன்றாக தமிழகம் திகழ்கிறது – முதல்வர் பெருமிதம்

கொரோனா ஊரடங்கு காரணமாக நாட்டின் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியை சந்தித்தது. இதனை தொடர்ந்து ஒவ்வொரு கட்டங்களாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து, பல்வேறு துறைகளிலும் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு வருகின்றன.

கொரோனா பரவலுக்கு மத்தியில் ஒவ்வொரு மாநிலத்திலும் புதிய திட்டங்களுக்கான முதலீடுகள் எந்த வகையில் இருக்கிறது? என்பதை ‘பிராஜக்ட் டுடே’ நிறுவனம் ஆய்வு செய்து வெளியிட்டு வருகிறது. அந்தவகையில் நடப்பு நிதி ஆண்டின் 2-ம் காலாண்டில் மாநிலங்கள் வாரியாக முதலீடுகள் ஈர்க்கப்பட்டிருப்பது குறித்த புள்ளி விவரங்களை ‘பிராஜக்ட் டுடே’ நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் 132 திட்டங்கள் மூலம் 23 ஆயிரத்து 332 கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்து தமிழகம் 2-ம் இடத்தை பிடித்துள்ளது.

இதுகுறித்து தனது ட்விட்டரில் முதல்வர் பழனிசாமி பதிவிட்டுள்ள செய்தியில், கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் தமிழகத்தின் பொருளாதாரத்தை சரியான பாதையில் கொண்டு வருவதற்கான உறுதியான முயற்சிகள் பலனை தந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அதிமுக அரசின் முயற்சிகளை உறுதிப்படுத்தும் வகையில், தமிழகத்தை, இந்தியாவின் சிறந்த முதலீட்டு இடங்களில் ஒன்றாக கொண்டுள்ளதாகவும் அவர் பெருமையுடன் கூறியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button