செய்திகள்விளையாட்டு

சொல்லி அடித்த டெல்லி… புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்து அசத்தல்…!

டெல்லி அணி தான் இந்த முறை கோப்பையை வெல்லும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.2

ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்த அணி பெற்ற 5வது வெற்றி இதுவாகும்.

சார்ஜா மைதானத்தில் நடந்த இப்போட்டியில் ராஜஸ்தான் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி களமிறங்கிய டெல்லி அணியில் ஹெட்மேயர் 45 ரன்களும், ஸ்டோய்னிஸ் 39 ரன்களும் விளாசினர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அந்த அணி 8 விக்கெட்டுகளை இழந்து 184 ரன்கள் குவித்தது. ராஜஸ்தான் தரப்பில் ஜோப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதனைத் தொடர்ந்து வெற்றி இலக்கை நோக்கி பயணித்த ராஜஸ்தான் அணியினர், டெல்லியின் பந்துவீச்சில் தங்கள் விக்கெட்டுகளை அடுத்தடுத்து பறிகொடுத்தனர். அந்த அணியில் ராகுல் திவேதியா 38 ரன்களும், ஜெய்ஸ்வால் 34 ரன்களும் எடுக்க மற்ற வீரர்கள் பெரிதாக ரன் குவிக்கவில்லை.

இதனால் 19.4 ஓவர்களில் ராஜஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளை இழந்து 138 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் டெல்லி அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 6 போட்டிகளில் விளையாடியுள்ள டெல்லிக்கு இது 5வது வெற்றியாகும். இதன்மூலம் இந்த ஐபிஎல் தொடரில் அசைக்க முடியாத அணியாக டெல்லி திகழ்கிறது.

அதேசமயம் பலம் வாய்ந்த வீரர்களை கொண்ட ராஜஸ்தானுக்கு இது 4வது தோல்வியாகும். அந்த அணி புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button