கவர் ஸ்டோரிசென்னை

சென்னை கோயம்பேடு சந்தையில் 50 வியாபாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதி – பொதுமக்கள் பீதி

கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த சென்னை கோயம்பேடு சந்தை 5 மாத இடைவெளிக்கு பிறகு கடந்த மாதம் 28ஆம் தேதி மீண்டும் திறக்கப்பட்டது. இதனையடுத்து, அன்று முதல் கோயம்பேடு சந்தை வழக்கம் போல் செயல்பட தொடங்கியது.

வியாபாரிகளும், பொதுமக்களும் முகக்கவசம் அணியாமல் சந்தைக்குள் வரக்கூடாது, சமூக இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என மாநகராட்சி நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை தரப்பில் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக 194 மொத்த காய்கறி கடைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. பூ, பழம் உள்ளிட்ட கடைகளை திறக்க இன்னும் மாநகராட்சி நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை. இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை சரக்கு லாரிகள், வேன்கள் சந்தைக்குள் அனுமதிக்கப்படுகிறது.

இந்தநிலையில், கோயம்பேடு திறக்கப்பட்டு 12 நாட்களே ஆன நிலையில், வியாபாரிகள் 50 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மற்ற வியாபாரிகளும், பொதுமக்களும் அச்சம் அடைந்துள்ளனர். மீண்டும் கோயம்பேடு சந்தை மூடப்படுமோ? என்ற ஐயம் எழுந்துள்ளது.

கோயம்பேடு சந்தை மீண்டும் திறக்கப்பட்டது முதல் நேற்று வரை கிட்டத்தட்ட சுமார் 2500-க்கும் மேற்பட்டவரிடம் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button