அரசியல்கவர் ஸ்டோரிசென்னை

அதிமுகவில் 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு அமைப்பு – முதல்வர் அறிவிப்பு

சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில், கட்சியின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி இன்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார். முன்னதாக அதிமுக கட்சி செயல்பாடுகளை தீர்மானிக்கும் வகையில் 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டது. அதிமுக அவைத் தலைவர் மதுசூதனனின் ஒப்புதலுடன் வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டு உள்ளதாக இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

அதிமுகவின் இந்த 11 பேர் கொண்ட வழிகாட்டு குழுவில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார், காமராஜ், சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

மேலும், மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகர், முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணன், மாணிக்கம் எம்.எல்.ஏ, முன்னாள் அமைச்சர் பா.மோகன் என மொத்தம் 11 பேர் இடம் பெற்றுள்ளனர். இந்த குழுவில் துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் 6 பேரும், முதல்வர் பழனிசாமி ஆதரவாளர்கள் 5 பேர் இடம் பெற்றுள்ளனர்.

இந்த வழிகாட்டுதல் குழுவில் பண்ருட்டி ராமச்சந்திரன், அன்வர்ராஜா, நத்தம் விஸ்வநாதன் போன்ற மூத்த தலைவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button