கவர் ஸ்டோரிதமிழ்நாடு

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய 5-ம் கட்ட ஊரடங்கு நாளை முதல் அமல்

திரையரங்குகள், சுற்றுலாத்தலங்கள் திறக்க அக்டோபர் 31-ம் தேதி வரை தடை நீட்டிப்பு,,,

கொரோனா தொற்று பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. நோய் தொற்று பரவலை தடுக்கும் வகையில் கடந்த மார்ச் முதல் பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன. தமிழகத்தில் 8-ம் கட்ட ஊரடங்கு இன்றுடன் நிறைவடைகிறது.

இதனையடுத்து, அடுத்த மாதம் எடுக்கப்பட வேண்டிய கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும், மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஓரளவு குறைந்த நிலையில், மேலும் நோய் தொற்று பரவாமல் தடுக்கம் விதமாக, அக்டோபர் 31ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

அதன்படி, உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்கவும், பார்சல் சேவை இரவு 10 மணி வரை செயல்படலாம் என்றும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. திரைப்பட படப்பிடிப்புகளில் பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளுடன் 100 பேருக்கு மிகாமல் பங்கேற்க அனுமதியளிக்கப்பட்டுளள்து.

சென்னை விமான நிலையத்தில் நாள்தோறும் 50 உள்நாட்டு விமானங்கள் தரையிறங்க அனுமதியளிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 100 விமானங்கள் வரை தரையிறங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பள்ளிகள், கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் செயல்பாட்டுக்கு விதிக்கப்பட்ட தடை அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திரையரங்குகள், பொழுதுபோக்கு பூங்காக்கள், கடற்கரை, உயிரியல் பூங்காக்கள், சுற்றுலாத்தலங்கள், நீச்சல் குளங்கள், அருங்காட்சியகங்கள் போன்றவற்றிற்கு தடை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புறநகர் மின்சார ரயில் செயல்பாட்டுக்கான தடை தொடர்ந்து அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக பொது இடங்களில் 5 பேருக்கும் மேல் கூட விதிக்கப்பட்டுள்ள தடை மற்றும், மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்த விதிக்கப்பட்ட தடை தொடரும் என்றும் முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button