தமிழ்நாடுவானிலை

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு புதுக்கோட்டை, சிவகங்கை, கரூர், திருச்சிராப்பள்ளி, சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 48 மணி நேரத்தில் வட கடலோர மாவட்டங்கள், சேலம், தர்மபுரி,கிருஷ்ணகிரி, நாமக்கல், பெரம்பலூர், அரியலூர், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதேபோல், தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் ஏனைய உள்மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.  சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

சென்னை புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு பொதுமக்கள் மற்றும் விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button