சினிமாசென்னைதமிழ்நாடு

விஜயகாந்த் – பிரேமலதா குறித்து தனியார் மருத்துவமனை புதிய தகவல்

தேமுதிக தலைவர் விஜயகாந்த், உடல்நிலை சரியில்லாததால் கடந்த சில ஆண்டுகளாகவே தீவிர அரசியலில் ஈடுபட முடியாத நிலையில் இருந்து வருகிறார். இந்த சூழ்நிலையில், கடந்த 22-ந் தேதி உடல்நலக் குறைவு காரணமாக மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு விஜயகாந்துக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் பூரண உடல் நலத்துடன் இருப்பதாகவும், வழக்கமாக 6 மாதத்திற்கு ஒருமுறை உடல் பரிசோதனைக்காக அவர் மருத்துவமனைக்கு செல்வது வழக்கம் என்றும் தேமுதிக தலைமைக்கழகம் அறிக்கை வெளியிட்டிருந்தது. இதனிடையே, விஜயகாந்தின் உடல்நிலை குறித்து அரசியல்தலைவர்கள், திரைத்துறையினர் உட்பட பலர் விசாரித்து வருகின்றனர்.

தேமுதிக தலைவர் விஜயகாந்தை தொடர்ந்து, மனைவி பிரேமலதா விஜயாகாந்த்துக்கும் கொரோனா தொற்று உறுதியானது. தற்போது இருவரின் உடல்நிலையும் சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில், விஜயகாந்துக்கு தற்போது கொரோனா அறிகுறி இல்லாததால், விரைவில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளதாக மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button