இந்தியாகிரைம்

ஓடும் பேருந்தில் இளம்பெண் மாறி மாறி பலாத்காரம் – ஓட்டுநர், நடத்துனர் வெறிச்செயல்

பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெறும் உத்தரபிரதேசம் மாநிலத்தின் முதல்வராக யோகி ஆதித்யநாத் உள்ளார். அண்மைக்காலமாக பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மாநிலத்தில் அதிகரித்து கொண்டே வருகின்றன. இதனைத் தடுக்க யோகி அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எதிர்கட்சிகள் தொடர்ந்து குற்றச்சாட்டி வருகின்றன.

இந்தநிலையில், பைசாலி பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்ட பேருந்து ஒன்றில் இளம்பெண் ஒருவர் பயணித்துள்ளார். பேருந்துக்குள் ஓட்டுனர், நடத்துனர் மட்டுமே இருந்துள்ளனர். மீரட் – டெல்லி சாலையில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது, அந்த பெண்ணிடம் நைசாக பேசி மயக்க மருந்து கலந்த கூல்டிரிங்ஸை குடிக்க வைத்துள்ளனர்.

பெண் மயங்கி விழுந்ததும், பேருந்தில் வைத்து ஓட்டுனரும், நடத்துனரும் மாறி மாறி பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர் அந்த பெண்ணுக்கு மயக்கம் தெளிந்தவுடன் மீரட் சாலையில் இறக்கிவிட்டுள்ளனர். பலத்த காயம் அடைந்த பெண்ணை மீட்ட போலீசார், அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதுதொடர்பாக விசாரணையும் நடத்தி வருகின்றனர்.

தெற்கு டெல்லியில், கடந்த 2012 ஆம் ஆண்டு ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவியை 5 பேர் கொண்ட கும்பல் மாறி மாறி பலாத்காரம் செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து தற்போது 3 வது நிகழ்வாக ஓடும் பேருந்தில் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button