கிரைம்கோவைதமிழ்நாடு

கணவனை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி – கோவையில் அதிர்ச்சி சம்பவம்

கோவை வெரைட்டி ஹால் அருகேயுள்ள திருமால் வீதியை சேர்ந்தவர் பிராங்க்ளின் பிரிட்டோ (35). இவர் பீளமேடு பகுதியில் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் விற்பனையாளராக பணியாற்றி வந்தார். இவர் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு கரோலின் (31) என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் கழுத்து, வயிறு பகுதிகளில் பலத்த வெட்டு காயங்களுடன், கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார் பிரிட்டோ. அவரை பரிசோதித்ததில், ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பின்னர் சந்தேக மரணம் தொடர்பாக வெரைட்டி ஹால் காவல் துறையினர் மனைவி கரோலினிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது கணவர் பிராங்க்ளின் கடந்த 2 ஆண்டுகளாக உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை  பெற்று வந்ததாகவும், சமையலறையில் காய்கறி நறுக்கி விட்டு திரும்பும்போது எதிர்பாராதவிதமாக பின்னால் நின்ற கணவனின் கழுத்தில் கத்தி வெட்டியதாகவும் அவர் தெரிவித்தார்.

கரோலினின் பதிலில் சந்தேகமடைந்த காவல் துறையினர் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தியதில், கணவன், மனைவிக்கு இடையே தகராறு இருந்து வந்தது தெரியவந்தது. மேலும் தாலியை அடமானம் வைத்ததை மீட்டுத்தர கரோலின் கேட்டபோது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, காய் வெட்டும் கத்தியால் குத்தியதால் கணவன் பிரிட்டோ உயிரிழந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து கரோலினை கைது செய்து வெரைட்டி ஹால் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கணவனை மனைவியே கொலை செய்து விட்டு, எதிர்பாராத விதமாக கத்தி பட்டு உயிரிழந்ததாக நாடகமாடியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button