திருவண்ணாமலை

எங்க பொண்ணு 2 மாதம் கர்ப்பமா இருக்கா… பையன் வீட்டார் சொன்ன பதிலால் அதிர்ச்சி!

திருமணம் செய்து கொள்ளுமாறு கூற, அதற்கு மறுப்பு தெரிவித்ததோடு, கர்ப்பத்தை கலைக்கச் சொன்ன பையன் வீட்டார்

12 ம் வகுப்பு மாணவியை பல முறை பலாத்காரம் செய்த, இளைஞரால், அந்த மாணவி 2 மாதம் கர்ப்பமான நிலையில், திருமணம் செய்து கொள்ளுமாறு கூற, அதற்கு மறுப்பு தெரிவித்ததோடு, கர்ப்பத்தை கலைக்கச் சொன்ன பையன் வீட்டார் மீது காவல்துறையில் பெண் வீட்டார் புகார் அளித்த சம்பவம் வேட்டவலம் அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அடுத்த ஆவூர் கிராமத்தை சேர்ந்த பரசுராமன் என்பவரது மகன் பார்த்திபன் அதே கிராமத்தைச் சேர்ந்த சேர்ந்த ஏழை கூலி தொழிலாளியின் மகளான 12ஆம் வகுப்பு மாணவியை காதலித்து வந்துள்ளார்.  இதனை பயன்படுத்தி பார்த்திபன் மாணவியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.  இதனால் மாணவி 2 மாதம் கர்பமாகி இருந்துள்ளார், இந்த விவகாரம் மாணவியின் பெற்றோருக்கு தெரியவந்ததையடுத்து பார்த்திபன் வீட்டிற்கு சென்று திருமணம் செய்து கொள்ளும்படி மாணவியின் பெற்றோர் கேட்டுள்ளனர்.

ஆனால் பார்த்திபனின் பெற்றோர் கருவை கலைத்துவிட்டு வந்தால் திருமணம் செய்து வைப்பதாக தெரிவித்துள்ளனர், இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.இதனால் மன உளைச்சல் ஏற்பட்ட மாணவியின் பெற்றோர்கள் திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர், இந்த புகார் குறித்து விசாரணை மேற்கொண்ட அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் பட்டதாரி இளைஞர் பார்த்திபனை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். 12 ம் வகுப்பிற்கு செல்லும் மாணவிக்கு, பட்டதாரி ஆசிரியர் காதல் வலை வீசி கர்பமாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

4 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button