கிரைம்செய்திகள்தமிழ்நாடு

இரவு நேரம் சிசிடிவி ஓடினா வீண் செலவு – 50 சவரனை பறிகொடுத்த நகைக் கடைக்காரரின் பதிலால் போலீஸ் அதிர்ச்சி

கடையில் சிசிடிவி கேமராவை ஆராய நினைத்த போலீசாருக்கு மேலும் அதிர்ச்சி காத்திருந்தது..

அரியலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் பிரபல நகைக்கடையில் 50 பவுன் நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் சின்னக்கடை வீதியில் ஸ்ரீபாலாஜி தங்கநகை மாளிகை என்ற நகைக்கடை இயங்கி வருகிறது. எந்நேரமும் மக்கள் நடமாட்டம் இருக்கும் பகுதியில் இந்த கடை அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று இரவு வழக்கம்போல கடையின் உரிமையாளர் சௌந்தரராஜன் வியாபாரம் முடிந்து நகைகளை ஷோகேஷில் வைத்து கடையை பூட்டி விட்டு சென்றுள்ளார்.

இந்நிலையில் இந்த நகைக்கடைக்கு அருகில் அமைந்துள்ள தேங்காய்கடை அமைந்துள்ளது. கடையின் உரிமையாளரான ராமலிங்கம் என்பவர் கடையை இன்று காலை திறந்து பார்த்தப்போது அதிர்ச்சியடைந்தார். காரணன் அவரின் கடை வழியாக நகைக்கடைக்குள் செல்ல துளையிடப்பட்டு சிலர் சென்றதற்கான அடையாளம் இருந்துள்ளது. உடனடியாக நகைக்கடை உரிமையாளர் சௌந்தரராஜனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு கடையை திறந்து பார்த்த போது ஷோகேஷில் வைக்கப்பட்டிருந்த சுமார் 50பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து அரியலூர் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் மோப்பநாய் மற்றும் தடவியல் நிபுணர்கள் உதவியுடன் சம்பவ இடத்தை ஆய்வு செய்து தடயங்களை சேகரித்து வருகின்றனர். மேலும் சௌந்தரராஜனிடம் நடத்திய விசாரணையில் கடையில் உள்ள சிசிடிவி கேமராக்களை இரவில் கடை மூடும் போது அணைத்து விட்டு செல்வதை வழக்கமாக வைத்துள்ளதாக தெரிவித்தது போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நகைக்கடையில் வேலைப்பார்க்கும் அனைத்து ஊழியர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அதேசமயம் துளையிட்டு கொள்ளையடிக்கும் குற்றவாளிகள் குறித்த தகவல்களும் சேகரிப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் கடையில் வைக்கப்பட்டிருந்த ஒன்றரை லட்சம் ரூபாய் பணம் தப்பியது.

இதற்கிடையில் அருகிலுள்ள செந்துறை நகரில் ரவிக்குமார் என்பவரின் நகைக்கடையிலும் இதேபோல் கொள்ளை முயற்சி நடந்துள்ளது. இந்த நகைக்கடைக்கு பின்னால் குடியிருந்த ஆனந்தாவாடி அரசுபள்ளி ஆசிரியர் வீட்டிற்குள் புகுந்து 1.40 லட்சம் ரூபாய் பணத்தையும், மூன்று சவரன் நகைகளையும் திருடிச் சென்ற மர்ம நபர்கள் நகைக்கடையிலும் கைவரிசை காட்ட முடிவு செய்த நிலையில்,துளையிடும் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் வந்ததால் கொள்ளையர்கள் தப்பித்து ஓடினர்.

அடுத்தடுத்து ஒரே சமயத்தில் நடைபெற்ற கொள்ளைச் சம்பவம் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button