கிரைம்தமிழ்நாடுதிருச்சி

மனைவி, மாமியார் படுகொலை விசாரணையில் அதிர்ச்சி தகவல் – குழந்தையுடன் தப்பியோடிய கணவன்

திருச்சி பெரிய மிளகுப்பாறை நாயக்கர் தெருவில் கடந்த ஒரு வருடமாக உலகநாதன் என்பவர் மனைவி பவித்ரா மற்றும் குழந்தை கனிஷ்கா(2) உடன் வசித்து வந்துள்ளார். பவித்ராவின் தயார் கலைச்செல்வி, கடந்த சில நாட்களாக உலகநாதன் வீட்டில் வசித்து வருகிறார்.

உலகநாதன் மாமியார் கலைச்செல்வி கடந்த சில நாட்களாக உலகநாதன் வீட்டில் வசித்து வருகிறார். உலகநாதனுக்கு வலிப்பு நோய் இருப்பதால், அதற்கான சிகிச்சை எடுத்து வருகிறார். இதனால் அவர் வேலைக்கு செல்லாத நிலையில், மனைவி பவித்ரா அரசு தேர்வுகளுக்கு தாயராகி வந்துள்ளார். தம்பதியர் இருவரும் வீட்டில் இருப்பதால், கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் உலகநாதன் தாயார் இந்திராணி, மகனுக்கும், மருமகள் பவித்ராவிற்கும் போன் செய்த போது அவர்கள் எடுக்காமல் இருந்துள்ளனர். இதனையடுத்து பக்கத்து வீட்டிற்கு போன் செய்து மகன் வீட்டை பார்த்து வருமாறு கூறியுள்ளார் இந்திராணி. வீட்டின் கதவு உள்பக்கம் பூட்டியிருந்ததால் சந்தேகமடைந்த அவர்கள், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, ரத்த வெள்ளத்தில் பவித்ராவும், கலைச்செல்வியும் இறந்து கிடந்தனர்.

இதைப்பார்த்து  அதிர்ச்சியடைந்த பக்கத்து வீட்டினர், இதுகுறித்து செசன்ஸ் கோர்ட் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் அங்கு வந்த போலீசார் இறந்த உடல்களை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு வந்து, திருச்சி மாநகர காவல்துறை துணை ஆணையர் பவன் குமார் விசாரணை மேற்கொண்டார்.

தடவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் இரட்டை கொலை செய்து விட்டு குழந்தையை தூக்கி கொண்டு தப்பி ஓடிய உலகநாதனை காவல்துறையினர் தேடி வருகின்றனர். வேலையின்றி இருந்து வந்த உலகநாதன் நீண்ட நேரமாக செல்ஃபோனில் சிலரிடம் பேசி வந்துள்ளார். இதை பவித்ரா தட்டிக்கேட்கும் போது இருவருக்குமிடையே அவ்வப்போது சண்டை வந்துள்ளது. இதன் காரணமாகவே கொலை சம்பவம் நடந்திருக்கலாம் என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது .

 

Related Articles

5 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button