சினிமாசென்னைதமிழ்நாடு

திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் (74) காலமானார் – ரசிகர்கள் அதிர்ச்சி

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட பிரபல திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் (74), கடந்த 5 ஆம் தேதி சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்ததால், கடந்த சில நாட்களுக்கு முன்பு தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

இதனையடுத்து, அவரது உடல்நிலை குறித்து ஒவ்வொரு நாளும் மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்பு எஸ்.பி.பி. மயக்க நிலையில் இருந்து தற்போது மீண்டுள்ளதாகவும், அவ்வப்போது கண்களை திறந்து பார்ப்பதாகவும் கூறப்பட்டது.

கடந்த 50 நாட்களுக்கும் மேலாக எஸ்.பி.பி.க்கு உயிர் காக்கும் கருவிகளுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர். அவர் பூரண குணமடைய வேண்டும் என  உலகம் முழுவதிலும் இருந்த அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் கூட்டு பிரார்த்தனை நடத்தினர். இதனை தொடர்ந்து அவர் முற்றிலுமாக குணமடைந்து வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மீண்டும் அவரது உடல் நிலை கவலைக்கிடமானது.

இதனிடையே பாடகர் எஸ்.பி.பி.க்கு எக்மோ உயிர்காக்கும் கருவி மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், கடந்த 24 மணி நேரத்தில் அவரது உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் உள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது. மேலும் “அவரது மூளையில் தீடீரென ஏற்பட்ட ரத்தக் கசிவின் காரணமாக எஸ்.பி.பி அவர்களது உடல்நிலை தற்போது கவலைக்கிடமாக இருக்கிறது” என்று தெரிவித்திருந்தது.

இந்தநிலையில் சென்னையில் உள்ள எம்.ஜி.எம். மருத்துவமனையில் நுரையீரல் தொற்றால் கடந்த 50 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த பிரபல திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்றும் கங்கை அமரன் மகன் வெங்கட் பிரவு டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். பாடு நிலா பாலு காலமானதால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். திரையுலக பிரபலங்கள் மறைந்த எஸ்.பி.பி.க்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர் .

இந்திய சினிமாவில் புகழ் பெற்ற இசை பாடகராகவும், இசையமைப்பாளராக பணியாற்றி பல விருதுகளை வென்றவர் எஸ்.பி.பி. 1966 ஆம் ஆண்டு ஒரு தெலுங்குத் திரைப்படத்தில் பாடி திரைத்துறையில் அறிமுகமான இவர், தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு மற்றும் ஹிந்தி என பல மொழிகளில் இதுவரை பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார். சாந்தி நிலையம் என்ற படத்தில் இயற்கை என்னும் இளைய கன்னி என்ற பாடல் மூலம் அவர் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இதுவரை தேசிய விருதினை நான்கு மொழிகளுக்குப் பெற்ற ஒரே திரைப்படப் பின்னணிப் பாடகர் இவர் ஒருவரே என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button