கிரைம்தமிழ்நாடுமதுரை

தலையில் கல்லைப் போட்டு பிரபல ரவுடி கொடூர கொலை – மதுரையில் பதற்றம்

மதுரை கிரைம் பிரான்ச் ஓண்டி முத்து பிள்ளை தெரு பகுதியை சேர்ந்தவர் சரவணன் என்ற பழனி. இவர் மீது பல கொலை வழக்குகள் மதுரை மாநகரில் நிலுவையில் உள்ளது. இந்தநிலையில்,  நேற்றிரவு அதே பகுதியில் உள்ள ஒரு கடை வாசலில் அமர்ந்து பழனி மது அருந்திக் கொண்டிருந்தார்.

அப்போது, மதுபோதையில் அங்கு வந்த மர்ம கும்பலுக்கும், இவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது, இதில் மர்ம கும்பல் அவர் மீது கல்லை போட்டு கொலை செய்து விட்டு தப்பி ஓடியது. படுகாயமடைந்த சரவணன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தெற்குவாசல் காவல்துறையினர் அவருடைய உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து, மோப்ப நாய் உதவியுடன் தடயங்களை சேகரித்த போலீசார், அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், சம்பவ இடத்தில் மதுரை மாநகர சட்ட ஒழுங்கு துணை ஆணையர் சிவபிரசாத் விசாரணை நடத்தினார்.

பழனிக்கும் அவரது தங்கை கணவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் அல்லது வேறு ஏதாவது காரணமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button