கன்னியாகுமரிதமிழ்நாடு

பப்ஜி விளையாட்டின் போது மலர்ந்த காதல் – போலீசில் காதலர்கள் தஞ்சம்

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே செறுகோல் ஆசாரிபொற்றவிளையை சேர்ந்தவர் சசிகுமார். மரவியாபாரியதன இவரது மகள் பபிஷா (20) கல்லுரியில் முதலாமாண்டு படிப்பை பாதியிலே நிறுத்திவிட்டு வீட்டில் இருந்துள்ளார்.

வீட்டில் பொழுது போவதற்காக மொபைல் போன் மூலம் பப்ஜி விளையாடுவதில் பபிஷா அதிக ஆர்வம் கொண்டிருந்தார். அப்போது திருவாரூரைச் சேர்ந்த அஜின் பிரின்ஸ் (25) என்பவருடன் ஜோடி சேர்ந்து பப்ஜி விளையாடிய போது, இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது.

இந்நிலையில் கடந்த 19-ம் தேதி பபிஷா வீட்டிலிருந்து மாயமானார். இதுகுறித்து திருவட்டாறு போலீஸில் பபிஷாவின் தந்தை சசிகுமார் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதனையடுத்து கடந்த 22ம் தேதி அஜின் பிரின்சுடன் பபிஷா திருவட்டாறு காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தார்.

இருவரது பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் காதலர்கள் இருவரும் சேர்ந்து வாழ்வதில் உறுதியாக இருந்தனர். இதனால் போலீஸார் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். இதைத்தொடர்ந்து காவல் நிலையம் அருகே உள்ள கோயிலில் இருவரும் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். பப்ஜி விளையாட்டில் ஏற்பட்ட காதல் திருமணம் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related Articles

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button