சிவகங்கைதமிழ்நாடு

அணிகலனுடன் கூடிய பெண்முகம் கொண்ட பானை ஓடு கீழடியில் கண்டெடுப்பு

சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சியின் மூலம் சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மனிதர்களின் நாகரீகம், கலாச்சாரம், பழக்க வழக்கங்கள் கண்டறியப்பட்டன. அதுமட்டுமல்லாது, அவர்கள் பயன்படுத்திய தங்க ஆபரணங்கள், மண்பாண்ட பொருட்கள், சுடுமண் சிற்பம்,  உறைகிணறு, சுடுமண் குழாய், தந்த தாயகட்டை, சூதுபவளம், அரசு முத்திரை, முத்து, பவளம், பாசி மணிகள், பானை ஓடுகள், சிறிய பானைகள், கருப்பு சிவப்பு வண்ண பானைகள் என  13 ஆயிரத்துக்கும் அதிகமான தொன்மையான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.

கீழடியில் 5 ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி :

கடந்த 2019 ஜூன் மாதத்தில் நடைபெற்ற 5ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகளின் போது, 10 அடி நீளம், 2 அடி அகலம் கொண்ட இரட்டைச் சுவர்கள் கண்டறியப்பட்டன.  2 ஆயிரத்து 600 ஆண்டுகளுக்கு முன்பு தமிழர்கள் பயன்படுத்திய பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளதால், உலகம் முழுவதும் கீழடி அகழாய்வு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கீழடியில் இதுவரை 5 கட்டங்களாக அகழ்வராய்ச்சி நடைபெற்று வந்துள்ளது.

5 ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி :

கடந்த பிப்ரவரி மாதம் கீழடியில் 6 ஆம் கட்ட அகழாய்வு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை ஏழு குழிகள் தோண்டப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. இங்கு கண்டெடுக்கப்பட்ட பானைகள் பெரும்பாலும் இணைப்பு குழாயாக பயன்படுத்தியிருக்க வாய்ப்புள்ளதாக தொல்லியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.  2 ஆம் கட்ட அகழாய்வில் கிடைத்த கட்டுமான சுவர்களின் தொடர்ச்சி இதில் வெளிப்பட்டு வருகின்றன. வாய்க்கால்களின் முடிவிலும் தொடக்கத்திலும் வெவ்வேறு வடிவிலான பானைகள் தென்படுகின்றன. மேலும் தண்ணீர் போன்ற திரவம் கால்வாய் வழியாக வந்து பானையில் விழுந்து பின் வேறு பகுதிக்கு சென்றிருக்க வாய்ப்புள்ளது.

பெண் முகம் கொண்ட பானை ஓடு :

6 ஆம் கட்ட அகழாய்வு பணி செப்டம்பருடன் நிறைவடைய உள்ள நிலையில் அகரத்தில் பெண் முகம் கொண்ட பானை ஓடு நேற்று கண்டறியப்பட்டது. கழுத்தின் கீழே அணிகலனுடன் கூடிய பெண்முகம், வெளியூர் நபர்களை கண்டறிய பயன்படுத்திய ஆமை வடிவத்தை போன்ற அச்சு கீழடியில் கிடைத்துள்ளது. உள்ளங்கைக்குள் அடங்கும் வகையில் சிறிய கல்லில் செதுக்கப்பட்ட அச்சின் மேற்புறம் 3 சிறிய கோடுகள், பெண்கள் விளையாடும் வட்டச் சில்லுகள் அதிகம் கிடைத்துள்ளன.

 

 

 

 

மூலிகை வண்ணங்கள் பயன்படுத்திய தமிழர்கள் :

இதேபோல் கொந்தகையில் நடைபெற்று வரும் அகழாய்வில், கடந்த ஜூன் மாதம் அழகிய வடிவமைப்புடன் கூடிய தண்ணீர் கூஜா கண்டெடுக்கப்பட்டது. சுமார் 2 லிட்டர் தண்ணீர் பிடிக்கும் வகையில் உள்ள இந்த கூஜாவின் வெளிப்புற பகுதியில் அரை வட்ட வடிவில் கோடுகள் வரையப்பட்டு அதன் மேல் வெண்மை நிற வண்ணங்கள் தீட்டப்பட்டுள்ளன. 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் மூலிகை வண்ணங்களை பயன்படுத்தியிருக்கலாம் என கருதப்படுகிறது. இதனிடையே  சுரேஷ் என்பவரது நிலத்தில் 13 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டன. மேலும் ஓர் அழகிய வடிவமைப்புடன் கூடிய சிறிய தண்ணீர் அருந்தும் கூஜா, ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மதுரை நகரம் (சதுர்வேதி மங்கலம்) :

கீழடியில் 6ம் கட்ட அகழாய்வின் ஒரு பகுதியாக அகரம் பகுதியில் கடந்த மாதம் இரு உறைகிணறுகள் கண்டறியப்பட்ட நிலையில், ஒரு உறை கிணறு 21 அடுக்குகள் வரை உள்ளது. மேலும் மணலூர், கொந்தகை, கீழடி தொடர்ந்து அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன.  மணலூர், கீழடி, அகரம், கொந்தகை உள்ளிட்டவைகள் சேர்ந்து தான் மதுரை நகரம் சதுர்வேதி மங்கலம் என அழைக்கப்பட்டது. எனவே மணலூர் பண்டைய மதுரை நகரமாக இருந்துள்ளது என ஓய்வு பெற்ற தமிழ்பேராசிரியர் முத்துச்சாமி தெரிவித்துள்ளார்.

Related Articles

3 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button