Uncategorized

சர்ச்சை நடிகை மீரா மிதுன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு – போலீசார் திடீர் முடிவு

பிக்பாஸ் மூலம் பிரபலமான நடிகை மீரா மிதுன், சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட ஒரு சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ளார். அவ்வப்போது சமூக வலைத்தளத்தில் புகைப்படங்கள் மற்றும் சர்ச்சையான கருத்துக்களை பதிவு செய்து வருவதால் அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டன குரல்கள் எழுந்து வருகிறது.

சமீபத்தில் நடிகை திரிஷா, நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய் மற்றும் சூர்யா ஆகியோரை மிரா மிதுன் வம்புக்கு இழுத்துள்ளார். கன்னடர் ரஜினிகாந்த், கிறிஸ்தவர் விஜய் ஆகியோர் என் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிப்பதாக டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

மேலும் பிக் பாஸ் மூன்றாவது சீஸனின் போது, இயக்குநர் சேரன் தன்னிடம தவறாக நடந்துகொண்டதாக அவர் குற்றச்சாட்டினார். மீரா மிதுன் சொன்னது பொய் புகார் என வீடியோ ஆதாரத்துடன் கமல்ஹாசன் விளக்கினார். இவர் சினிமாக்காரர்கள் மட்டுமின்றி தமிழக அரசையும் அவர் கடுமையாக சாடி வருகிறார்.

இந்தநிலையில், மிஸ் சௌத் இந்தியா அழகி போட்டி ஒருங்கிணைப்பாளரும், ராஸ் மெட்டாஸ் நிறுவனத்தின் உரிமையாளருமான ஜோ மைக்கேல் பிரவீன் என்பவர் தன் மீது அவதூறு பரப்பி வருவதாக நடிகை மீரா மிதுன் மீது சென்னை எம்.கே.பி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார், தொல்லை தரும் வகையில் பொது இடத்தில் ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் நடிகை மீரா மிதுன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Related Articles

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button