அரசியல்இந்தியாசினிமா

தனது அலுவலகத்தை இடிக்கும் ஆர்வத்தை இடிந்து விழுந்த கட்டடத்தின் மீது காட்டிருக்கலாம் – சிவசேனை அரசை சீண்டிய நடிகை

மகாராஷ்டிர மாநிலம் மும்பை அருகே தானே மாவட்டம் பிவாண்டியில் 1984ஆம் ஆண்டு கட்டப்பட்ட அடிக்குமாடி குடியிருப்பில் 40 வீடுகள் உள்ளன. இங்கு 100-க்கும் மேற்பட்டோர் வசித்து வந்தனர்.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு அதிகாலையில் திடீரென கட்டடம் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. அப்போது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் இடிபாடுகளுக்குள் புதைந்தனர். இதுவரை 41 பேர் பலியாகிவிட்டனர். 20-க்கும் மேற்பட்டவர்கள் மீட்கப்பட்டனர். இன்னும் மீட்பு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

இதுகுறித்து நடிகை கங்கனா ரனாவத் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், மும்பையில் என்ன நடக்கிறது என்பது கடவுளுக்கு தெரியும்? பிவாண்டியில் கட்டடம் இடிந்து விபத்துக்குள்ளானதில் இறந்தவர்களின் எண்ணிக்கை புல்வாமா தீவிரவாத தாக்குதலில் இறந்தவர்களின் எண்ணிக்கை காட்டிலும் அதிகமாகும்.

கட்டடம் இடிந்து விபத்துகுள்ளானதற்கு மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, சிவசேனா எம்பி சஞ்சய் ராவத், மும்பை மாநகராட்சி அதிகாரிகள் ஆகியோரின் கவனக்குறைவே காரணம். மும்பையில் உள்ள எனது அலுவலகத்தை சட்டவிரோதமாக இடிப்பதை விட விபத்துக்குள்ளான இந்த கட்டடத்தின் மீது மும்பை மாநகராட்சி கவனம் செலுத்தி இருந்தால் இந்த சோகம் தவிர்க்கப்பட்டிருக்கலாம். இவ்வாறு நடிகை கங்கனா ரனாவத் கூறியிருந்தார்.

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை சம்பவத்தில், மும்பை கொலை நகரமாக மாறியுள்ளதாக நடிகை கங்கனா கூறியிருந்தார். இதற்கு கண்டனம் தெரிவித்த சிவசேனை அரசு, அவர் மும்பைக்கு வரக்கூடாது என எச்சரித்தது. ஆனால் மும்பைக்கு நிச்சயம் வருவேன் என்று கங்கனா பதிலடி கொடுத்தார்.

இதனால், அவருக்கும் மும்பை அரசுக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்தது. இந்த நிலையில் கங்கனாவின் கட்டடத்தின் ஒரு பகுதி சட்டவிரோதமாக கட்டப்பட்டதாக மும்பை மாநகராட்சி இடிக்கப்பட்டது. இதனையடுத்து கங்கனா வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் மகாராஷ்டிர அரசை விமர்சித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Related Articles

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button