கிரைம்தமிழ்நாடுதூத்துக்குடி

வேலையை விட்டு நீக்கியதால் ஆத்திரம் – வாலிபரை சக ஊழியரே வெட்டிக் கொன்ற கொடூரம்

தூத்துக்குடி சில்வர்புரத்தை சேர்ந்த நந்தகுமார் (42), ஜார்ஜ் (45) ஆகிய இருவரும், அதே பகுதியில் உள்ள பர்னிச்சர் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளனர். அப்போது தொழில் சம்பந்தமாக இவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஜார்ஜை, வேலையில் இருந்து நீக்கிவிட்டதாக கூறப்படுகிறது. இதற்கு நந்தகுமார் தான் காரணம் என்று கோபத்தில் இருந்துள்ளார் ஜார்ஜ். இந்தநிலையில், இன்று காலை இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த நந்தகுமாரை, வழிமறித்து அவரது கண்ணில் மிளகாய் பொடியை தூவி தாக்கியுள்ளார். பின்னர் அரிவாளால் அவரை வெட்டிக் கொலை செய்துவிட்டு ஜார்ஜ் தப்பிச் சென்றுவிட்டார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தூத்துக்குடி சிப்காட் போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து மோப்ப நாய் ஜியா வரவழைக்கப்பட்டு சோதனை  மேற்கொள்ளப்பட்டது.

இதனை தொடர்ந்து அருகில் உள்ள சிசிடிவி கேமராவை கொண்டு போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக ஜார்ஜ் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட நந்தகுமாருக்கு மனைவி மற்றும் 2 மகள்களும் உள்ளனர். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button