அரசியல்தமிழ்நாடுதிருவண்ணாமலை

தமிழகத்தில் இருந்து பிரதமராக வர வாய்ப்பு இருந்தும் தி.மு.க. தடுத்தது – பாஜக பரபரப்பு புகார்

திருவண்ணாமலை செட்டி தெருவில் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக வின் மண்டல நிர்வாகிகள், மாவட்ட அணி மற்றும் பிரிவு நிர்வாகிகள் அறிமுகம் மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், பாஜக மாநில பொதுச் செயலாளர் கே.டி. ராகவன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்திற்கு பல்வேறு துரோகங்களை இழைத்துள்ள திமுக மற்றும் ஸ்டாலினால் ஒரு போதும் ஆட்சிக்கு வர முடியாது. தெற்கு தேய்கிறது, வடக்கு வாழ்கிறது என்று தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சிகள் குறைக்கூறி வருகிறது. ஆனால் தமிழகத்தைச் சேர்ந்த அப்துல் கலாமை குடியரசுத் தலைவராக பாஜக நியமித்துள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்தவர் மீண்டும் ஜனாதிபதியாக பதவிக்கு வருவதை எதிர்த்தவர் கருணாநிதி. அதேபோல் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் பிரதமராக வருவதற்கு வாய்ப்பு இருந்தும் அதனை வர விடாமல் தடுத்ததும் திமுக தான். இவ்வாறு மாநில பொதுச் செயலாளர் கே.டி.ராகவன் தெரிவித்தார்.

முன்னதாக அறிமுகம் மற்றும் ஆலோசனை கூட்டத்தில்  300 க்கும் மேற்பட்ட பாஜக மாவட்ட மண்டல அணி பிரிவு நிர்வாகிகள் முகக் கவசம் மற்றும் தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமல் பங்கேற்றதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

 

Related Articles

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button