கவர் ஸ்டோரிசினிமாதமிழ்நாடுதிருப்பூர்

திருப்பூர் சிறுமிக்கு சர்வதேச விருது – அமெரிக்காவில் நடந்த குறும்பட விழாவில் சிறந்த குழந்தை நட்சத்திரமாக தேர்வு

கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த கிருஷ்ணன், திருப்பூரில் ஆடிட்டர் ஆக பணியாற்றி வருகிறார். அங்கேரிபாளையத்தில் வசித்து வரும் இவருக்கு மனைவி கவிதா மற்றும் மகள் மஹாஸ்வேதா (10) உள்ளனர். மண்பாண்டங்களில் ஓவியம் வரையும் பழக்கம் கொண்ட சிறுமி மஹாஸ்வேதா, அங்குள்ள தனியார் பள்ளியில் 5 ஆம் வகுப்பு பயின்று வருகிறார்.

மற்றவர்களுக்கு உதவும் எண்ணம் கொண்ட சிறுமி, தான் ஓவியம் வரைந்த மண்பாண்டங்களை விற்று கிடைக்கும் பணத்தின் மூலம் பலருக்கு முக்கவசங்களை வழங்கி வருகிறார். மேலும், சிறு வயது முதலே சேமிக்கும் பழக்கம் கொண்ட மஹாஸ்வேதா, தான் சேமித்து வைத்த பணத்தின் மூலம் கிராண்மா டாய் என்ற குறும்படத்தையும் பெற்றோர் உதவியுடன் எடுத்துள்ளார்.

இந்த குறும்படம், முதியோர் இல்லங்களில் தவித்தும் வரும் பெற்றோர்கள் பற்றி, இன்றைய தலைமுறையினர் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் விதமாக எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக மஹாஸ்வேதா நடித்துள்ளார்.

இந்தநிலையில், சர்வதேச குறும்பட விழா அமெரிக்காவில் உள்ள வேகாஸ் நகரில் நடைபெற்றது. இந்த பிரமாண்ட விழாவில் இந்தியா உள்பட 60க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல்வேறு குறும்படங்கள் போட்டியிட்டன. இதில் கிராண்மா டாய்’ என்ற குறும்படத்தில், அனாதை இல்லத்தில் வளரும் கதாபாத்திரத்தில் நடித்த  திருப்பூரைச் சேர்ந்த 10 வயது சிறுமி மஹாஸ்வேதாவுக்கு, சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான பிரஸ்டீஜ்’ விருது கிடைத்துள்ளது. இது 12 வயதுக்குட்பட்டோர் பிரிவில், இவருக்கு கிடைத்த இரண்டாவது சர்வதேச விருது ஆகும்.

கடந்த ஆண்டும் ஆரோடு பறையும் என்ற மலையாள குறும்படத்தில் நடித்ததற்காக மஹாஸ்வேதாவிற்கு லாஸ் ஏஞ்சல்ஸ் அவார்டு மூலமாக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருது கிடைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Articles

3 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button