கிரைம்தமிழ்நாடுநாகப்பட்டினம்

கோலம் போட வெளியே வந்த பெண்ணை ஆயுதங்களால் தாக்கி படுகொலை – சீர்காழியில் பயங்கரம்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி திருவள்ளுர் நகரை சேர்ந்தவர் ஆனந்தஜோதி. இவர் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சித்ரா (40). இவர் வீட்டு வாசலில் கோலம் போடுவதற்காக இன்று அதிகாலை வெளியே வந்துள்ளார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் சித்ராவை பயங்கர ஆயுதங்களால் தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

இதில் படுகாயமடைந்த சித்ரா, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மனைவி இறந்து கிடப்பதைக் கண்ட கணவர் ஆனந்த ஜோதி கதறி அழுதுள்ளார். அருகில் உள்ளவர்கள் போலீசாருக்கு உடனடியாக தகவல் கொடுத்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சித்ராவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். மேலும் தப்பியோடிய மர்ம நபர்களையும் வலைவீசி தேடி வருகின்றனர். அதிகாலை நேரத்தில் வழக்கம்போல், கோலம் போட வெளியே வந்த பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button